Sports | விளையாட்டு
ஸ்பார்க் உள்ள இந்த 4 இளம் வீரர்களில், 2 நபரையாவது சேருங்க தோனி! வெற்றி நிச்சயம் உங்களுக்கு
10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை இந்தளவுக்கு சொதப்பியது. கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை விட்டு விட்டு தடுமாறி வருகின்றனர். சீனியர் வீரர்கள் சொதப்புவதே முக்கிய காரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ரசிகர்களே வெறுத்து போகுமளவுக்கு வந்துவிட்டது நிலமை.
சில இளம் வீரர்களிடம் நாங்கள் அந்தளவுக்கு உத்வேகத்தை பார்க்கவில்லை. அடுத்த போட்டிகளில் அவர்களை ஆட வைப்போம், அவர்களும் அழுத்தம் ஏதும் இன்றி விளையாட முடியும்.என தோனி தெரிவித்தது பல தரப்பில் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியது.

csk dhoni jagadeesan
“ஜெகதீசனிடம் என்ன உத்வேகம் (ஸ்பார்க்) இல்லை, ஸ்கூட்டர் ஜாதவை தொடர்ந்து அணியில் எடுப்பதன் மூலம் அவரிடம் என்ன ‘ஸ்பார்க்கை’ கண்டார் தோனி. கரண் சர்மா விக்கெட்டுகள் ஆவது எடுத்தார். சாவ்லா அப்படியே போகிற போக்கில் கடமைக்கே என பந்து வீசினார்.” என்று கூட கடுமையாக பேசினார் தமிழில் ஐபிஎல் வர்ணனை மேற்கொண்டு வரும் முன்னாள் அதிரடி வீரரும், இந்திய முன்னாள் கேப்டனுமான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
சிஎஸ்கேவிடமும் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். வாங்க பார்ப்போம்.
கேதார் ஜாதாவுக்கு பதில் –
ருத்ராஜ் கைக்கவாட் – 23 வயது டாப் ஆர்டர் பேட்ஸ்மான். கொரானா தொற்று ஏற்பட்டு, பின்பு குணமாகினார். சீசன் ஆரம்பம் முதலே ஓபனிங் அல்லது ரைனாவின் நம்பர் 3 பொசிஷன் வழங்கி இருக்கும் பட்சத்தில் அசத்தி இருப்பார். இரண்டு போட்டிகள் ஆடியுள்ளார், ஒன்றில் டக் அவுட், அடுத்ததில் 5 ரன்கள். சாம் கர்ரன் ஒபெனிங்கில் சொதப்புவதால் இவருக்கு கொடுக்கலாம் வாய்ப்பை. உள்ளூர் மற்றும் இந்திய ஏ போட்டிகளில் ரன்களை குவித்தவர்.
நாராயணன் ஜெகதீசன் – விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான், துவக்க ஆட்டக்காரர். கைக்வ்வாட் அளவுக்கு அதிரடியாக ஆடுபவர் இல்லை எனினும் நல்ல இன்னிங்ஸ் அமைக்க டீமுக்கு உதுவுவார். இரண்டு வருடமாக பெஞ்சில் இருந்தவர் ஒரே போட்டியில் விளையாடினார் இம்முறை. 28 பாலில் 33 ரன் எடுத்து துரதிருஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார். ஒரு காலகட்டத்தில் டீமிற்கு பத்ரிநாத் செய்த வேலையே இவர் செய்ய ஏற்றவர்.
பியூஸ் சாவ்லாவிற்கு பதிலாக …. ஜோஷ் ஹஸில்வுட் பதிலாக இம்ரான் தாஹிர் சேர்க்கப்படும் பட்சத்தில்
சாய் கிஷோர் – இடது கை ஸ்பின் பௌலர். 23 வயது வாலிபர். பவர் பிலே சமயத்திலும் பந்து வீசுவார். தாஹிர்க்கு சப்போர்ட் செய்வார், எனினும் இடது கை பேட்ஸ்மேன் நிறைய உள்ள மும்பை டீமுடன் ஆடவைப்பதன் வாய்ப்பு குறைவு தான்.
கே எம் ஆசிப் – 140 kph வீசக்கூடியவர். சாவ்லாவுக்கு பதில் சேர்க்கப்படும் பட்சத்தில் சர்ப்பிரைஸ் ஆயுதமாக இருக்கக்கூடும்.
சென்னை அணி என்ன முடிவு எடுப்பார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
