மொத்த வசூல் 500 கோடியை தாண்டி விடுமோ.. அதிர்ச்சி ரிப்போர்ட்டை கிளப்பிய விக்ரம் படத்தின் வேட்டை

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கமலஹாசனின் விக்ரம் படம். இதுவரை திரையரங்கில் காணாத ரசிகர் கூட்டத்தை இப்படத்திற்கு காணமுடிகிறது. லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் மிகப் பெரிய வரவேற்பு பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

மேலும் கமலஹாசனின் படம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. கமல் ரசிகர்கள் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் வைத்திருந்தனர். கூடுதலாக இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியிருந்தார். சூர்யாவும் சில நிமிடங்களில் ரசிகர்களை மகிழ்வித்த சென்றார்.

இவ்வாறு குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் தான் விக்ரம். இதனால் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும்போது விக்ரம் படம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

மேலும் படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் பூர்த்தி செய்தது. இந்நிலையில் விக்ரம் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி வசூல் என்றால் இந்த படத்தின் மொத்த வசூல் எங்கேயோ போய்விடும் என்று அனைவரும் அதிர்ச்சித் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

அதாவது கேரளாவில் மட்டும் விக்ரம் படம் முதல்நாளில் 5 கோடி வசூல் செய்துள்ளதாம். இதுவரை கேரளாவை எந்தப்படமும் நிகழ்த்தாத சாதனையை விக்ரம்படம் நிகழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல் நாளிலேயே இந்த படம் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் சேர்த்த 50 கோடியை கடந்துவிட்டது என்கிறார்கள்.

இப்படியே போனால் விக்ரம் படம் கிட்டத்தட்ட 500 கோடி வசூல் வேட்டையாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் கமலின் திரைப்பயணத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த என்ற பெருமையையும் விக்ரம் படம் பெற்றுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்