கண்கலங்கிய காங்கிரஸ் தலைவர்.. எதிர்க்கட்சியின் கூட்டணி தொடருமா.?

சட்டப்பேரவை தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இச்சூழ்நிலையில் அனைத்து கட்சியினரும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் தற்போது அதிமுக கட்சி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அவ்வாறு நிகழ்த்தப்பட்ட அந்த பேச்சுவார்த்தையில் பாஜக, பாமக ஆகியவைக்கு சுமூகமாக தொகுதிகளை பிரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பாஜக கட்சிக்கு 20 சீட்டுகளை வழங்கியுள்ளது அதிமுக. இச்சூழ்நிலையில் திமுக தனது தோழமைக் கட்சியான காங்கிரஸ் இடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது.

அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தக்க மரியாதையும் வழங்கவில்லை சரியான தொகுதி பங்கீடும் அளிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்து வருகிறது. இச்சூழல் நீடித்தால் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணியை தொடராது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் திமுக மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இந்நிலையில் திமுக வழங்கிய 6 தொகுதிகளை மட்டும் பெற்ற திருமாவளவனும் மற்றும் வி.சி.கவினரும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, ‘எதிர்பார்த்த அளவிற்கு சீட்டும் கிடைக்கவில்லை, மரியாதையும் கிடைக்கவில்லை’ என்று கண்கலங்கி கூறியுள்ளார்.

KS Alagiri

மேலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் உடன் நேர்காணல் நடந்த பிறகே, தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுபோன்று தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி தொடருமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்