மீண்டும் இந்தியாவிற்கு வந்த வில் ஸ்மித்.. ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடந்த முடிந்த 94-வது ஆஸ்கார் விருதுகளில் டென்னிஸ் வீராங்கனை சகோதரிகள் வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோரின் தந்தையின் வாழ்கக்கையை மையமாக கொண்டு உருவான கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதினை முதல் முறையாக வென்றதை விட காமெடி நடிகர் கிரிஸ் ராக்கை மேடையில் கன்னத்தில் அறைந்ததற்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

தனது மனைவியின் கேன்சர் நோயை பற்றி சற்று கேலியாக பேசிய கிரிஸ் ராக்கை அறைந்தார் வில் ஸ்மீத். மேடையில் அவ்வாறு நடந்ததால் அவர் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டார். சிலர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தாலும், பலரும் இதற்கு எதிராக பதிவுகளையும் தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த சம்பவத்திற்கு பிறகு பொது வெளியில் தோன்றாமல் இருந்த வில் ஸ்மித் தற்போது முதல் முறையாக வெளியில் வந்துள்ளார். இந்தியாவிலுள்ள மும்பை தனியார் விமான நிலையமான கலினாவில் காணப்பட்டார். அவர் மும்பையின் ஜூஹூவில் உள்ள ஜெ.டபுள்யூ மேரியட் ஹோட்டலில் இவ்வளவு காலம் தங்கியிருந்துள்ளார். இந்து வழி கடவுள் வழிபாட்டில் பெரிதும் நாட்டம் கொண்ட அவர் ஒரு ரகசிய ஆன்மீக சந்திப்பிற்காக பயணத்தை இங்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.

மூன்று நாட்களாகவே ஹோட்டலில் தங்கியிருந்து இஸ்கான் என்ற இடத்திலுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா விருந்தாபன்பெஹாரி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். மேலும் இந்த பயணத்தில் அவர் இந்து மாதகுருவான சத்குருவையும் சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே சத்குருவை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சந்தித்து அவருக்கு விருந்து அளித்து, அவரது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஸ்மித் இந்தியா வருவது இது முதல் முறையல்ல பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் டைகர் ஷெராஃப் உள்ளிட்ட சில ஏ-லிஸ்ட் பாலிவுட் பிரபலங்களுடன் இவருக்கு நெருங்கிய நட்புறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர் சில முறை இந்தியா வந்துள்ளார்.

அகடமி அவார்ட் நிகழ்ச்சிக்கு பிறகு பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்களும், நடிகர்களும் அவருடன் நடிப்பதற்கு தடை அறிவித்துள்ளன. மேலும் தற்போது தயாரிப்பிலிருந்த அடுத்த படமும் நின்றுள்ளது. அந்த சம்பவத்திற்கு பதிலளித்த ஆஸ்கார் சம்மேளனம், இது துரதிஷ்டவசமான சம்பவம் என்றாலும் இதன் பிறகு நடிகர் வில் ஸ்மித் 10 ஆண்டுகளுக்கு இது போன்ற விருது விழாக்களில் பங்கு பெறுவதற்கு தடை விதித்துள்ளதாக முன்னர் அறிவித்திருந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்