Connect with us
boomerang-movie

ஐபில் போட்டிகளில் ஸ்மித்,வார்னர் விளையாட முடியுமா ? கேப்டன் பதவி என்னவாகும் ? அலசல் ரிப்போர்ட்.

News | செய்திகள்

ஐபில் போட்டிகளில் ஸ்மித்,வார்னர் விளையாட முடியுமா ? கேப்டன் பதவி என்னவாகும் ? அலசல் ரிப்போர்ட்.

டீம் ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. ஸ்மித் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். மேலும் ஐசிசி விதிமுறையை மீறி பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் விவாத களமாகிவிட்டது.

கேமரன் பேன்கிராஃப்ட்

இளம் வீரரான பேன்கிராஃப்ட் தன் விரல்களுக்கு மத்தியில் மஞ்சள் நிற பேப்பர் கொண்டு பந்தை சேதப்படுத்தியது கமெராவில் பதிவானது. அதனை மைதானத்தில் உள்ள திரையிலும் காட்டினார். சப்ஸ்டிடூட் வீரரான பேட் ஹண்ட்ஸ்காம் விரைந்து சென்று இந்த தகவலையும் அவரிடம் கூறினார். உடனே பதட்டமாக செய்வது அறியாமல் முழித்தார் பேன்கிராஃப்ட்.

Cameron Bancroft

சனிக்கிழமையன்று கேப் டவுனில் நடைபெற்ற பத்திரிகையாளர் தாம் பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என பேன்கிராஃப்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ‘பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்’ என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். மேலும், இதுகுறித்து தலைமைக்குழு பேசியதாக கூறிய ஸ்மித், தாம் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

Bancroft – Smith

ஆஸ்திரேலிய பிரதமர் கருத்து

“ஆஸ்திரேலிய அணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்பவர்கள். எப்படி எங்கள் அணி மோசடி செய்யமுடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர். டிம் பைன் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் ஐசிசி ஸ்மித்துக்கு ஒரு போட்டி தடையும் , பேன்கிராஃப்ட்க்கு 3 டி மெரிட் புள்ளிகள் அளித்தது.

ஐபில் நிலைப்பாடு

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா “பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின், பிசிசிஐ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடவடிக்கையை எடுக்கும். இப்போதுள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் அவர் மீது பிசிசிஐ அல்லது ராஜஸ்தான் அணி ஏதும் எடுக்க முடியாது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல மிக முக்கியமான வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஆதலால், அவருக்கு விதிக்கப்படும் தண்டனையைப் பொறுத்தே அணியின் முடிவு மாறுபடும். பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஆகவே ஆஸ்திரேலிய வீரர்கள் மீது வீரர் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீது ஐசிசி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான தண்டனைகள் விதித்தால் கூட அவர்கள் ஐபில் போட்டிகளில் விளையாடுவதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது என்றே தோன்றுகிறது.

ஏனெனில் இருவரும் அந்த அணிக்கு முக்கிய வீரர்கள். பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் ஐபில் இவர்கள் இருவரையும் அவ்வளவு எளிதில் நீக்கிவிட்டது என்பது தான் நிஜம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top