புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சித்தார்த் படத்திற்கு வந்த சிக்கல்.. நாளை ரிலீஸாகுமா மிஸ் யூ?

Siddharth : நடிகர் சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகி இருக்கிறது மிஸ் யூ படம். என் ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் நவம்பர் 29ஆம் தேதி அதாவது நாளை இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

முக்கியமாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் படமும் வெளியாகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடினார்கள்.

அதன் பிறகு சித்தார்த் கமலின் நடிப்பில் உருவான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. மேலும் சமீபத்தில் அதிதி ராவை சித்தார்த் கரம் பிடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது.

நாளை வெளியாகுமா சித்தார்தின் மிஸ் யூ படம்

ஆனால் இப்போது மிஸ் யூ படம் நாளை வெளியாகாது என தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஃபெங்கல் புயல் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் எதிர்பார்த்த அளவு தியேட்டருக்கு மக்கள் வருவது கடினம்.

ஆகையால் படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் மிஸ் யூ படத்தை பிறகு வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றனர். எனவே நாளை சித்தார்த் மிஸ் யூ படம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பு இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்ததில் இருக்கின்றனர்.

மேலும் மிஸ் யூ படத்தில் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் போன்றோர் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மிஸ் யூ படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது

- Advertisement -

Trending News