fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தொடர்ச்சியாக 9 முறை, கிரிக்கெட் கேரியரை கேள்விக்குறி ஆக்கிய இந்திய வீரரின் பவுன்சர்.. இளம் வீரருக்கு சிக்கல்!

Karthik-Tiyaki-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

தொடர்ச்சியாக 9 முறை, கிரிக்கெட் கேரியரை கேள்விக்குறி ஆக்கிய இந்திய வீரரின் பவுன்சர்.. இளம் வீரருக்கு சிக்கல்!

ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தியா ஏ அணிகள் பங்குபெறும் பயிற்சி டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா ஏ அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டி முடிவு ஏதும் இன்றி டிரா ஆனது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி பெரிதும் நம்பி இருந்த இளம் வீரர் வில் புக்கோவ்ஸ்கி தற்போது டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்விருஅணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்திய அணியின் இளம் வீரர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்தில் வில் புக்கோவ்ஸ்கி தலையில் அடிபட்டு பாதி போட்டியில் வெளியேறினார். இவருக்கு இதற்கு முன்பு அடிக்கடி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

21 வயதான இவர் இந்த போட்டியில் 9வது முறையாக காயம் காரணமாக பாதியில் வெளியேறி உள்ளார். தொடக்க காலத்தில் தலையில் பந்து வேகமாக பட்டால் மட்டுமே வில்லிற்கு தலை சுற்றல் வந்தது. ஆனால் இப்போதெல்லாம் இவருக்கு பந்து மெதுவாக பட்டாலே தலை சுற்றல் வருகிறது.

இதற்கு மருத்துவர்கள் பழைய பாதிப்புகள் போகாமல் இருப்பதால் இப்படி நடக்க வாய்ப்புள்ளது. வில்லிற்கு இதற்கு முன் ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஏதாவது பின் விளைவுகள் இருக்கலாம். தற்போது லேசாக காயம் ஏற்பட்டாலே இவருக்கு தலை சுற்றுகிறது என்று கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அவருடைய கிரிக்கெட் கேரியர் தொடக்க காலத்திலேயே மிகவும் ஆபத்தான கட்டத்தில்  இருக்கிறது. இனி அவர் எப்படி ஆடுவார் என்பதே சந்தேகமாக உள்ளது, என்று ஆஸ்திரேலிய மருத்துவர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

Will-Pucovski-Cinemapettai.jpg

Will-Pucovski-Cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top