ஹைதராபாத்: ராஜமவுலி படத்தில் ஹீரோவாக நடித்தால் அடுத்த படம் பிளாப் தான் என்ற நம்பிக்கையை உடைப்பாரா பிரபாஸ் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 3 ஹிட்கள் கொடுத்து கெரியரின் உச்சத்தில் இருந்தபோது பிரபாஸ் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடிக்க 5 ஆண்டு கால்ஷீட் கொடுத்தார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன.

சாஹோ

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடிக்கிறார். இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  காதுல ரத்தம் வருது விட்டு விடுங்க 'ஜூலி'- இந்த பாடலை நீங்களே கேட்டு பாருங்க!

டோலிவுட்

ராஜமவுலி இயக்கத்தில் ஹீரோவாக நடித்தால் அடுத்த படம் கண்டிப்பாக பிளாப் தான் என்று தெலுங்கு திரையுலகில் நம்பப்படுகிறது. இது வெறும் நம்பிக்கை அல்ல அப்படித் தான் இதுவரை நடந்துள்ளது.

பிரபாஸ்

முன்னதாக பிரபாஸ் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் சத்ரபதி ஹிட் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த பவுர்ணமி படம் ஊத்திக் கொண்டது.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர். ராஜமவுலி இயக்கத்தில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் மற்றும் சிம்ஹாத்ரி ஆகிய வெற்றிப் படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஊத்திக் கொண்டன.

அதிகம் படித்தவை:  Samantha’s fitness video

ரவிதேஜா

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ரவி தேஜா நடித்த விக்ரமார்குடு படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு அவர் நடித்த கதர்நாாக் பிளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

சாஹோ?

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் சாஹோ படம் டோலிவுட் நம்பிக்கை படி ஊத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கத்தை மாற்றி பிரபாஸ் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.