vijay-jyothika
vijay-jyothika

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி படம் வெளிவந்தது அது விஜய், ஜோதிகா-வுக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. படம் முழுக்க முழுக்க காதல் படம் என்பதால் மிக அழகாக ரொமான்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டது. இப்பொழுது விஜய் தனது 63 ஆவது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் இயக்குனர் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா இப்பொழுதுதான் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த காற்றின் மொழி என்ற படம் இந்த வாரம் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் புரமோஷன் போது செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது கண்டிப்பாக விஜய்-யுடன் இணைந்து நடிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும். அது குஷி இரண்டாம் பாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

அதிகம் படித்தவை:  ஒரு விரல் புரட்சி! இன்று சர்கார் இரண்டாவது பாடல்

vijay jyothikaசினிமா வட்டாரங்கள் குஷி இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, விஜய்-யின் மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குஷி இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

அதிகம் படித்தவை:  எனக்கு துளிகூட பயமில்லை  தளபதி படம் குறித்து அட்லீ அதிரடி.!

காற்றின் மொழி சற்று ஹிட் ஆனால் மீண்டும் சில படங்களில் நடிக திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். விஜயுடன் நடித்தால் பின்பு அஜித்துடன் இணைய வேண்டுமே. நடக்குமா? பார்க்கலாம்.