அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரும்  படம்தான் மெர்சல்,இதில்  காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் டீசர்  வெளிவந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் மெர்சல் டீஸர் ரசிகர்கள் கொண்டாடும் படி அமைந்துவிட்டது. டீஸரில் ஒவ்வொரு காட்சியிலும் விஜய் மெர்சல் காட்டுகிறார்.அட்லீ இயக்கிய இப்படம் கண்டிப்பாக வேறொரு பிரம்மாண்டம் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் சாந்தனு டுவிட்டரில் மெர்சல் பட டீஸரை புகழ்ந்து தள்ளிவிட்டு, இவ்ளோ பண்ணிட்டு இந்த மனுஷன் அமைதியா எங்கயோ உக்கார்ந்துருப்பாரு என்று டுவிட் செய்திருக்கிறார்.