fbpx
Connect with us

தெறி சாதனையையை தாண்டுமா பைரவா ?

bhairava-record

News / செய்திகள்

தெறி சாதனையையை தாண்டுமா பைரவா ?

ஒரு படத்தை வெளியிட்டு அந்தப் படம் வசூலில் சாதனை படைக்கிறதோ இல்லையோ அந்தப் படத்தின் டீசர், டிரைலர் யு டியூபில் சாதனை படைக்க வேண்டும் என அந்தப் படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

சொல்லப் போனால், அவை டிரென்டிங்கில் வந்தால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கூட மகிழ்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்களின் டீசர் அல்லது டிரைலர் ஆகியவை வெளிவந்தால் அவை சமூக வலைத்தளங்களிலும், யு டியூபிலும் டிரென்டிங்கில் முதலிடத்தில் வந்துவிடுகிறது. இதை அவர்களது ரசிகர்கள் பெருமையாகப் பேசவும் செய்கிறார்கள்.

இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேதான் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். அஜித் நடித்த வேதாளம் படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டதால் இப்போது அஜித் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்புரை எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஆனால், விஜய் நடித்துள்ள இரண்டு படங்களின் டீசர் இந்த ஆண்டில் வெளியாகிவிட்டது. அதனால், அந்த இரண்டு படங்களில் எது முந்தப் போகிறது என்பதுதான் இப்போது விஜய் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கப் போகிறது.

விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த தெறி படத்தின் டீசர் யு டியூபில் இதுவரை 1 கோடியே பத்து லட்சத்திற்கு மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் டீசரை லைக் செய்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த பைரவா டீசரை இதுவரை 81 லட்சம் பேர் பைர்த்துள்ளனர். 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அஜித் நடித்த வேதாளம் பட டீசர் சாதனையை தெறி படமே எப்போதோ முறியடித்துவிட்டதால், இப்போது தெறி படத்தின் சாதனையை பைரவா முறியடிக்குமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top