ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பாகுபலி  படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 6000 தியேட்டர்களில் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் இப்படம் வெளியானாலும் கர்நாடகாவில் வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் பலவும் இந்தப் படத்தை கர்நாடகாவில் வெளியாக விடாமல் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. காவிரி பிரச்சனையில் சத்யராஜ், கன்னட மக்களுக்கு எதிராகப் பேசிய பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த எதிர்ப்பைக் கையாள்வதாகக் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக கன்னட அமைப்புகள் பலரும் தொடர்ந்து பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இதுவரை பாகுபலி படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து யாரும் கன்னட அமைப்புகளுடன் பேசவில்லை. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் சத்யராஜ் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பாரா அல்லது அவரை மன்னிப்புக் கேட்க வைக்க பாகுபலி தயாரிப்பாளர்கள் முயற்சிப்பார்களா என்பது தெரியவில்லை.பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத கன்னட அமைப்புகள் இப்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு வேறு காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதிகம் படித்தவை:  புது பிசினசில் உமி நடிகை