சின்னத்திரையிலிருந்து திரைப்படங்களில் நடிக்க வந்திருக்கும் மாகாபா.ஆனந்த், முதலில் வானவராயன்வல்லவராயன் படத்தில் நடித்திருந்தார். அதற்கடுத்து அட்டி, நவரசதிலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் அட்டி படம், சென்னையின் காசிமேடு, ராயபுரம் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் எதார்த்த வாழ்க்கையை மையப்படுத்திய கதையைக் கொண்ட படமாம்.

அந்தப்பகுதி இளைஞர்களில் ஒருவராக நடித்திருக்கும் நாயகன் ஆனந்த்தின் வேடம், கானாபாடகர் மற்றும் அஜித்ரசிகர் ஆகிய இரண்டுவிதமாக அடையாளப்படுகிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறதாம். படத்தில் அஜித்தைப் புகழ்ந்து வசனங்கள் பேசுகறி மாதிரியான காட்சிகளும் அமைந்திருக்கின்றனவாம்.

வளரும் நடிகர்கள் முன்னணிநடிகர்களின் ரசிகராக நடித்தால் அந்த முன்னணிநடிகரின் ரசிகர்களும் இந்தப்படத்துக்கு ஆதரவு தருவார்கள் என்கிற நம்பிக்கை மட்டுமின்றி சம்பந்தப்பட்ட கதாநாயகனும் அந்த ரசிகர்களிடையே பிரபலமாவார். அது படத்துக்கு மட்டுமின்றி அந்த நடிகருக்கும் பலனாக இருக்கும் என்று நினைத்துத்தான் இப்படிச் செய்கிறார்கள்.

சந்தானம், சிவகார்த்திகேயன் போல நாமும் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று நினைத்த மாகாபா.ஆனந்துக்கு அவர் நடித்த முதல்படம் கைகொடுக்கவில்லை. அட்டியில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். அஜித் அவருக்கு கைகொடுப்பாரா?