Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓடும் பேருந்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்! பட்டபகலில் பயங்கரம்!
மேட்டுப்பாளையம் சங்கர் பகுதியை சேர்ந்த உதயா (20), இவரது மனைவி ஆனந்தி (18), இருவரும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். அடிக்கடி கணவன், மனைவிக்குள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாமல் ஆனந்தி தன்னுடைய தாய் வீட்டுக்கு மேட்டுப்பாளையம் பேருந்தில் சென்று கொண்டிந்தார். பேருந்து தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது அதே பேருந்தில் வந்த கணவர், ஆனந்தியை சமாதானம் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆனந்தி வரமுடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த உதயா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆனந்தி மீது சராமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஆனந்தி கதறியுள்ளார், இதனையடுத்து அதே பேருந்தில் ஆனந்தியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆனந்தி உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய உதயாவை வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணை கத்தியால் குத்திகொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
