இந்தியாவில் கணவன் மீது புகார் கொடுத்த மனைவி, அவர் மீது கொண்ட அதீத அன்பினால் அவரை சிறையில் கட்டிப்பிடித்து உருக்கமாக பேசியுள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாந்தானி- மாலிக், இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சாந்தானி கோம்திப்பூர் காவல்நிலையத்தில் மாலிக் மற்றும் அவரது பெற்றோர் கொடுமை செய்வதாக புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் விசாரணை செய்த பொலிசார் அவர்களை விசாரணை செய்து மாலிக் மற்றும் அவரது பெற்றோரை காவல்நிலையத்தில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கணவன் மாலிக்கை பார்ப்பதற்கு சாந்தானி காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மனம் மாறிய அவர் மாலிக் உடன் தானும் சிறையில் இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

பொலிசார் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் பொலிசாரிடம் கண்ணீருடன் மாலிக்கை மிக விரும்புவதாகவும், அவரின் பெற்றோரே இந்த பிரச்னைக்குக் காரணம் என கூறியுள்ளார்.

மாலிக்குடன் தன்னை சிறையில் அடைப்பதற்கு அனுமதி தராவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர் பொலிசார் சாந்தானியை உள்ளே அனுமதித்துள்ளனர். சிறைக்குள் சென்ற சந்தானியும், மாலிக்கும் கட்டிப்பிடித்த உருக்கமாகப் பேசிக் கொண்டனர். அன்றைய தினம் ஒரே சிறையில் இருந்த இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் பின்னர் விடுவித்தனர்.