Connect with us
Cinemapettai

Cinemapettai

சொத்துக்காக கணவரை எரித்துக் கொன்ற மனைவி.. திருநெல்வேலியில் பயங்கரம்

tirunelveli

Tamil Nadu | தமிழ் நாடு

சொத்துக்காக கணவரை எரித்துக் கொன்ற மனைவி.. திருநெல்வேலியில் பயங்கரம்

தனது மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பதாக கூறிய கணவரை தூங்கிக் கொண்டிருக்கும் போது மண்ணெண்ணெயை ஊற்றி மனைவி கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (68). இவரது மனைவி மரியஷீலா(62 ). இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.

வெளிநாட்டில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்த பாக்கியராஜ், தற்போது ஊருக்கு வந்து தனியார் வங்கி ஒன்றில் காவலராக பணி செய்து வந்தார்.  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறிது காலம் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். பாக்யராஜகும் அவரது மனைவி மலேசியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பாக்யராஜ், பக்கமாக கண் பார்வையால் அவதிப்பட்டு  இருந்தது தெரியவந்தது.ஆகையால் தனது மகன்களுக்கு சொத்தை பிரித்து தரும் நோக்கத்தில் நிலத்தை அளந்து வைத்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி மரிய ஷீலா, சொத்துகளை பிரியக்கூடாது.

என்னிடம் கொடு என்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாக்யராஜ் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் அவரது மகன்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எதுக்கும் தூங்கும் போது உசாரா இருக்கணுமோ..?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top