புதன்கிழமை, நவம்பர் 13, 2024

முல்லையை பருத்திவீரன் ஸ்டைலில் ரொமான்ஸ் செய்த கதிர்.. சட்டை கசங்கிற போகுது பார்த்து ஜி!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் கூட்டு குடும்பத்துடன் ஒற்றுமையுடன் வாழ்வதே அழகாக காட்டுவதால் சின்னத்திரை ரசிகர்களிடையே இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்னிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு, தற்போது மூர்த்தி குடும்பத்தினர் சாதாரண மளிகைக் கடையிலிருந்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் ஒன்றை திறக்க உள்ளனர். இதற்கு ஆயத்தமாகும் குடும்பத்தினருக்கு முல்லை பாசத்துடன் துணிகளை தைத்துக் தருகிறார்.

கயல் பாப்பாவிற்கு பாவாடை சட்டை மற்றும் மீனா, ஐஸ்வர்யா, தனம் ஆகியோருக்கு ஜாக்கெட் உள்ளிட்டவற்றை அவர் கையினாலேயே வைத்து கொடுத்து தன்னுடைய சந்தோசத்தை முல்லை வெளிப்படுத்துகிறாள்.

அத்துடன் தன்னுடைய கணவர் கதிருக்கும் சிகப்பு நிறத்தில் சட்டை தைத்து கொடுத்து, தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார். அதை வாங்கிக் கொண்ட கதிர் இந்த சட்டையை கடைத் திறப்பு விழாவிற்கு போடப் போகிறேன் என்று மனைவி தைத்துக் கொடுத்த சட்டையை போட்டு பார்த்து சந்தோஷப்படுகிறார்.

அப்போது முல்லை, கதிர் தோள் மீது சாய்ந்து கொண்டு பருத்திவீரன் கார்த்திக் ரேஞ்சுக்கு தங்களுடைய காதலை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் சட்டையை போட்டுக்கொண்ட கதிரை கட்டிப்பிடித்து கொண்ட முல்லையிடம், ‘சட்டை கசங்கிற போகுது. எங்களுடைய பொண்டாட்டி தைத்துக் கொடுத்து சட்டை’ என்று சொல்லி கொஞ்சி குலவுகிறான்.

சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஹைலைட்டாக பார்க்கப்படும் கதிர்-முல்லை ரோமன்ஸ் குறைந்து விட்டது என கவலைப்பட்ட ரசிகர்களின் தற்போது மீண்டும் கதிர்-முல்லை ரோமன்ஸ் தூக்கலாக காட்டப்படுவது சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

- Advertisement -spot_img

Trending News