kings-xi-punjab_Cinemapettai
கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபில் இன் துவக்க சீசனில் இருந்தே வெறித்தனமான ரசிகர்களை கொண்ட அணி. இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருக்காகவே இந்த அணியை ஆதரப்பிவர்கள் உண்டு. முதல் சீசனில் ப்ரீத்தியின் கட்டிப்புடி வைத்தியமும் ரொம்ப பேமஸ் தான். ஏனோ இந்த அணி ஆரம்பம் முதலே ஜெயித்த போட்டிகளை விட கோட்டை விட்ட போட்டிகளே அதிகம்.

புது பொலிவுடன்

இந்த அணியில் ஆலோசகராக வீரேந்திர ஷேவாக் இணைந்து சில சீசன்கள் ஆகிறது. சென்ற இரண்டு ஆண்டுகளாக குஜராத் லயன்ஸ் பயிற்சியாளராக இருந்த பிராட் ஹோட்ஜ் தான் இப்பொழுது கோச். மேலும் ஏலம் தொடங்கும் முன்பு அக்சார் படேல் மட்டுமே தக்கவைத்து இந்த அணி. ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என சேர்த்து 21 வீரர்களை எடுத்து இந்த அணி. கேப்டனாக யுவராஜ், பின்ச், மில்லர் யாருக்கேனும் காப்பதன் பதவி செல்லும் என நினைந்த நேரத்தில் அஸ்வினை கேப்டனாகியது அணி நிர்வாகம்.

விக்கெட் கீப்பர்

சென்ற சீசனில் வ்ரிதிமான் சாஹா தான் கீப்பராக இருந்தார். இந்த ஆண்டு எந்த ஒரு ஸ்பெசலிஸ்ட் கீப்பரையும் இந்த அணி நிர்வாகம் எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். அப்போ யார் தான் கீப்பிங் செய்வார்கள் என்பது தான் பலரின் கேள்வி ?

அதிகம் படித்தவை:  குஜராத் லயன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் த்ரிலாக வீழ்த்தியன் மூலம் ரோஹித் சர்மாவிற்கு நள்ளிரவில் கிடைத்த பரிசு என்ன.!?
கே எல் ராகுல்
kl rahul

கர்நாடகாவின் ராகுல் அவர்களை 11 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து அணி நிர்வாகம். இவர் தான் இந்த அணியின் முதல் சாய்ஸ் கீப்பர். ஏலத்தில் இவரை எடுத்து முடித்த பின், அணி நிர்வாகம் அவரை தொடர்பு கொண்டு இந்த தகவலை கூறியுள்ளனர். அவரும் முழு மனதுடன் ஓகே சொல்லிவிட்டு, அதற்காக தன்னை தயார் படுத்த ஆரம்பித்துவிட்டார். சிறு வயது முதலே கீப்பிங்கும் செய்யும் ராகுல் லோக்கல் உள்ளூர் போட்டிகளிலும் சில நேரங்களில் ஐபில் (பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்) ஆட்டங்களிலும் கீப்பிங் செய்துள்ளார். எனினும் முழு தொடர் முழுவதும் தாக்குப்புடிப்பாரா என்பது தான் நாம் பார்க்கவேண்டிய ஒன்று.

ஆரோன் பின்ச்
Finch – Amy – Wedding

கோச் ஹாட்ஜ் இவரிடம் யாரோ கீப்பிங் பாக் அப் பற்றி கேட்ட பொழுது இவர் பின்ச் அவர்களை கூறியுள்ளார். பின்ச் இதற்கு முன் சில லோக்கல் போட்டியில் கீப்பிங் செய்துள்ளார். எனினும் அஸ்வின் , படேல் போன்ற சிறந்த ஸ்பின் பௌலர்களுக்கு எதிர்த்து கீப்பிங் செய்யவது கடினமே .

அதிகம் படித்தவை:  ‘ஷர்டுல் தாக்கூர்’ : எதிராக கிளம்பிய இந்திய ரசிகர்கள்..
அக்ஷ்தீப் நாத்
Akshdeep-Nath

இளம் வீரர். இவரை சிறு வயதிலேயே இவருடைய தந்தை கிரிக்கெட் அகாடமயில் சேர்த்து விட்டாராம். இந்தியாவிற்க்காக யூ 19 உலகாக்கோப்பை ஆடியவர். பெரிய ஆளாக வருவார் என்று பலரும் பேசி வந்த நிலையில், பெரிதாக ரஞ்சி போட்டிகளில் சாதிக்கவில்லை. 24 வயதாகும் இவர் விக்கெட் கீப்பிங்கிலும் கை தேர்ந்தவராம், எனினும் இவரும் முழு நேர கீப்பிங் செய்யபவர் கிடையாது.

இவ்வாறு இந்த அணி தெரிந்தே விக்கெட் கீப்பிங்கில் ராகுல் மட்டும் நம்பி களம் இறங்குகிறதா ? அல்லது ஏலத்தில் இவர் தவறு செய்துவிட்டார்களா ? என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை. எனினும் ராகுல் முழு தகுதியுடன் காயம் இல்லாமல் தப்பித்து, சிறப்பாக கீப்பிங் செய்தால் ஓகே , இல்லையென்றால் மாற்று வீரர் யோசிக்கும் குழப்பத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பது தான் நிஜம்.