fbpx
Connect with us

தமிழக மக்களுக்கு எதிரான கருத்து: தனுஷ் மறுத்தும்,விஷால் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

News / செய்திகள்

தமிழக மக்களுக்கு எதிரான கருத்து: தனுஷ் மறுத்தும்,விஷால் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

dhanush-vishalசென்னையில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி பிசுபிசுத்ததுதான் கோலிவுட்டில் தற்போதைய டாப் டாக். பெரும்பாலான நடிகர்கள் அஜித் கூறியதுபோல் ஆளுக்கு கொஞ்சம் பணமே போட்டிருக்கலாம், நட்சத்திர கிரிக்கெட்டே வேஸ்ட் என்று கூற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் விஷால், “நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு. பொது மக்கள் இப்போது வேண்டுமானால் எங்களிடமிருந்து தப்பிக்கலாம், ஆனால் இந்த நஷ்டத்தை ஈடு கட்ட, நாங்கள் நடிக, நடிகைகள் அனைவரும் டிவி சீரியல்களில் நடித்து, கிரிக்கெட் பார்க்க வராத தமிழக மக்களை இம்சை செய்வோம். இதற்காக சங்க கூட்டத்தை விரைவில் கூட்டுவோம்” என்று கூறியதாக வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நேற்று இதேபோல் தனுஷ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக வெளிவந்த செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். விஷால் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை,இதனால் பலருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது,

என்றாலும் நடிகர் சங்கத்தின் முக்கிய பதவியில் உள்ள விஷால் இதுபோன்று கூறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும் இதுவும் வதந்திகளில் ஒன்றுதான் என்றும் கூறmப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top