ஜமைக்கா: உலகின் மின்னல் ஜமைக்காவின் உசைன் போல்ட், பெண்களை பின் தொடர்வதை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச தடகளத்தில் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட். ஒரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவே தடுமாறி வரும் வீரர்களுக்கு மத்தியில், பீஜிங், லண்டன், ரியோ என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் அசத்தி தங்கப்பதக்கங்களை குவித்தார்.

இதனால் இவர் பார்ட்டிகளில் பங்கேற்கும் போது, இவரை ஒரு பெண்கள் கூட்டம் சுற்றிக்கொள்வது வழக்கம். இவரும் அவர்களுக்கு இணையாக கம்மெனி கொடுத்து நடனமாட, சில நேரங்களில் அது ஆபாசத்தின் எல்லைக்கே சென்றுவிடும். இந்நிலையில் இவர் காசி பென்னட் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.

இவரது ஆபாச நடனத்தால், பென்னட் பல முறை தர்மசடங்களுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் தற்போது போல்ட் இனி பெண்கள் பின் செல்லப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போல்ட் கூறுகையில்,’ புகழ் பெற்றவராக இருந்தாலே, எல்லா பெண்களும் உங்கள் மீது வந்து விழுவார்கள். தற்போது அந்த வயதை நான் தாண்டிவிட்டேன். தவிரம் எனக்காக ஒரு பெண் பல வருடங்களாக காத்துக்கொண்டுள்ளார். அவருடன் எனது மீதி நாட்களை சந்தோசமாக கொண்டு செல்ல விரும்புகிறேன்,’ என்றார்