வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

சினிமாவில் பெண் இசையமைப்பாளர்கள் ஏன் இல்லை? ரசிகையின் கேள்விக்கு இளையராஜா ஓபன் டாக்

சினிமாவில் ஏன் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை என்ற கேள்விக்கு இசைஞானி இளையராஜா பதில் அளித்துள்ளார்.

பொதுவாகவே அனைத்துத் துறைகளிலும் ஆண்களே கோலோட்சிக் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் இன்று அனைத்துத் துறைகளிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே வேகமாக முன்னேறி வருகின்றனர். மிக உயர்ந்த பொறுப்புகளிலும் பதவி வகித்து வருகிறார்கள்.

ஆனால், சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக இன்னும் நடிகைகள் சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு சமீபகாலமாக எழுந்தது. இதுகுறித்து பாலிவுட், கோலிவுட்டைச் சேர்ந்த நடிகைகளே பொதுவெளியில் பேசியிருக்கிறார்கள்? அப்படியிருக்க இன்னும் நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுவது பேசுபொருளாகத்தான் இருக்கிறது.

ஆனால், பெண்கள் சினிமாவில் பல உயர்ந்த விருதுகளையும் பதவிகளையும் பெற்று வந்தாலும் கூட இன்னும் ஒருசில துறைகளில் அவர்கள் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருப்பது தான் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. குறிப்பாக கோலிவுட்டில் பெண் இசையமைப்பாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லையோ என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது.

ஹாலிவுட்டில் பெண் இசையமைப்பாளர்கள்

ஹாலிவுட்டில் பெண் இசையமைப்பாளர்களாக ஆஸ்கர் விருது வென்ற ஹில்டூர் குனாடோட்டிர், விஷீவல் மீடியா விருது பெற்றா ஜெர்மைன் பிராங்கோ, தொழில் சாதனையாளர் விருது வென்ற ரேச்சல் போர்ட்மேன், பினார் டோப்ரக், லாரா கார்ப்மேன், ஷெர்லி வாக்கர், ஐசோப்பெல் வாலர்-பாலம், 98 ஆம் அண்டு நகைச்சுவை பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற ஆனி டட்லி, உலகின் முதல் முழு நேர இசையமைப்பாளராக அறியப்படுகிற டோரீன் கார்வின், ஜோஸ்லின் பூக் ஆகியோர் உலகின் சிறந்த பெண் இசையமைப்பாளர்களா அறியப்படுகின்றனர்.

ஆனால் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து பல நூறு திரைப்படங்கள் குறிப்பாக தமிழில் இருந்தும் பல படங்கள் ரிலீசாகின்ற போதிலும் அதில் ப்ண்கள் இசையமைப்பாளர்களா ஏன் வெற்றி பெறவில்லை. ஏன் மீடியா வெளிச்சத்திற்கு வரவில்லை என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

கோலிவுட்டில் பெண் இசையமைப்பாளர்கள்

தமிழில், பானுமதி, பவதாரணி, ஏ.ஆ.ரஹ்மானின் சகோதரி ரெஹானா மற்றும் மகள் கதீஜா ரஹ்மான், கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோர் இசையமைப்பாளர்களாக இருந்தாலும் இன்னும் போதிய பட வாய்ப்புகளோ வெற்றியோ பெறாதது ஏன் என விவாதிக்கப்பப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் ஆண் இசையமைப்பாளர்கள் தான் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இளையராஜாவிடம் கேள்வி எழுப்பிய ரசிகை

இந்த நிலையில், இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் நடந்தி வந்தாலும், அவரது பின்னணி இசைக்கோர்ப்புகளை பதிவிடுவதற்காக புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவிடம் சினிமாவில் அதிக அளவில் இல்லை என்று ஒரு ரசிகை கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ’’நீ வாயேன், வந்துடு’’ என்று கூறினார்.

இதைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் கரகோசம் எழுப்பினர். அதாவது, எல்லோருக்கும் சம வாய்ப்புகள் தரப்படுகின்றனஎன்பதுபோல் அவர் கூறியதாகப் பலரும் இளையராஜாவின் பதில் பற்றி விவாதித்து வருகின்றனர். ஹாலிவுட்டில் உள்ளதைப் போன்றே கோலிவுட்டிலும் பெண் இசையமைப்பாளர்கள் வருங்காலத்தில் சினிமாத்துறையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News