பிஎஸ்பிபி பள்ளியில் இத்தனை பிரச்சனை நடக்குது, போராளி சித்தார்த் எங்கப்பா?

ஒவ்வொரு சமூக பிரச்சனைக்கும் குரல் கொடுக்கும் பிரபல நடிகர் சித்தார்த் பிஎஸ்பிபி பள்ளியில் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் பற்றிய பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது சித்தார்த் எங்கே போனார்? என்ற கேள்வி பலமாக ஒலிக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசை லெஃப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருப்பவர் சித்தார்த். எந்த ஒரு விஷயத்திற்கும் தயங்காமல் வருங்காலத்தில் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று யோசிக்காமல் நல்ல கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

அதே நேரத்தில் எந்த இடத்தில் எந்த தப்பு நடந்தாலும் அதற்கு தன்னுடைய டுவிட்டர் வாயிலாக குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டையே உலுக்கிய செய்தியாக மாறியுள்ளது பிஎஸ்பிபி பள்ளி விவகாரம்.

ராஜகோபாலன் என்ற ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையில் பெண் பிள்ளைகளை அந்த மாதிரி டார்ச்சல்களுக்கு உட்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சென்னையில் முக்கிய பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் இதேபோல் தான் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இப்படி பல விஷயம் நடக்கையில் சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் சித்தார்த் தற்போது எங்கே போனார்? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

கடந்த முறை மத்திய அரசை தாக்கிப் பேசும் போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பயந்துபோய் இந்த விஷயத்தில் குரல் கொடுக்காமல் இருக்கிறாரா என்றெல்லாம் சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும் பிஎஸ்பிபி பள்ளியில் படித்த பல முன்னாள் மாணவர்களும் அந்த பள்ளியின் ஒழுங்குமுறையின்மை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கம்ப்ளைன்ட் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

siddharth-cinemapettai-01
siddharth-cinemapettai-01
- Advertisement -spot_img

Trending News