சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள லைக்காவின் மருத்துவ மையத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மொபைல் மூலம் அதிக லாபம் ஈட்டும் இந்நிறுவனம், இலங்கையில் பல தொழில்களில் முதலிடு செய்து வருகிறது.
அது பாணியில் தமிழகத்தில் திரைத்துறையில் அதிக முதலீடு செய்துவருகிறது. இந்நிறுவனம் தற்போது மருத்துவத்துறையிலும் களமிறங்கியுள்ளது. இதற்காக உயர் ரக மருத்துவ பரிசோதனை மையமாகவும், சிகிச்சை மையமாகவும் இயங்கும் வகையில் ’லைக்கா ஹெல்த் வெஸ்ட் மினிஸ்டர்’ என்ற மருத்துவ மையத்தை சென்னையில் துவங்கியுள்ளது.

அதிகம் படித்தவை:  அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே - லேட்டஸ்ட் போட்டோ ஷூட் !

லைக்கா சுபாஷ்கரன் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மையத்தை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். ஸ்ரீலங்காவில் லைக்கா நிறுவனம் தமிழர்களுக்காக இலவச வீடுகளை திறந்து வைக்க அழைத்த போது ரஜினி ஸ்ரீலங்கா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது