fbpx
Connect with us

சிம்பு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் – விஷாலுக்கு டி.ஆர் அதிரடி பதில்

News / செய்திகள்

சிம்பு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் – விஷாலுக்கு டி.ஆர் அதிரடி பதில்

simbu-vishal-2பீப் பாடல் பிரச்சனை குறித்த விஷயத்தில் நடிகர் சங்கம் சிம்புவை மன்னிப்பு கேட்க கூறியிருந்தது நாம் அறிந்த விஷயம்.தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர்.

அதில் பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் எங்களை கேட்ட போது சட்டரீதியாக பார்த்துக் கொள்கிறோம் என்றேன்.யாரோ திருடி வெளியிட்ட அந்த பாட்டிற்கு என் மகன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு சங்கம் என்று இருந்தால் ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யவேண்டும். இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும்.

விஷால் எதிர்காலத்திலாவது என் மகன் விஷயத்தில் நடந்துகொண்டதைப்போல, மற்ற உறுப்பினர்கள் ஒருவேளை யாராவது பாதிக்கப்படும் விஷயத்தில் நடந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக சிம்பு கூறியவுடன் எங்களை தொடர்பு கொண்டு இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

எல்லாவற்றிற்கும் மேலாக என் மகனுக்காக தாயுள்ளத்தோடு முன்வந்து, நான் மன்னிப்பு கேட்கிறேன் என்ற நல்ல மனதுடன் சொன்ன முத்திரை பதித்த நடிகர், அனுபவமிக்க அன்பு சகோதரர், நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களையும் எண்ணி பார்க்க வேண்டும். அப்படி நல்ல இதயம் படைத்த நாசர், நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறார்.

கடைசியாக ஒன்று நடிகர் சங்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதைதான், நாம் எண்ணி பார்க்கவேண்டும். நடிகர் சங்கம், நமக்கு என்ன செய்தது என்பதை பற்றி நாம் கவலைப்படக்கூடாது. அதைவிட்டு விலக வேண்டாம், உன் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே உன் தந்தை என்ற முறையில் என் கருத்து.

இதற்கு மேல் உனக்கென்று தனி கொள்கை இருக்கலாம், சுயமரியாதை உணர்வு இருக்கலாம், அதை நான் மதிக்கிறேன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top