Rajini-Vijay-Ajith

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே அசந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த். இவர் தான் இன்றும் சூப்பர் ஸ்டாராக, யாருக்கும் தன் இடத்தை கொடுக்காமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

ரஜினி சில வருடங்கள் வரை ஒரு ரூபாய் கூட தன் சம்பளத்தை ஏற்றவே இல்லையாம், பல படங்களில் ஒரே சம்பளத்தை தான் பெற்றுள்ளார், அத்தனை ஹிட் கொடுத்தும்.

ஒரு கட்டத்தில் பஞ்சு அருணாச்சலம் அவர்களே ‘ரஜினி உன் சம்பளத்தை நான் ஏற்றுகிறேன்’, என ஒரு சம்பளத்தை கொடுத்துள்ளார், ரஜினி உடனே ”என்ன சார் எனக்கு இவ்வளவு பணம் தறீங்க” என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

ஆனால், விஜய், அஜித் படம் வெற்றியோ, தோல்வியோ சம்பளத்தை மட்டும் படத்திற்கு படம் ஏற்றி வருகின்றனர், படத்தின் பட்ஜெட்டில் பாதி இவர்கள் சம்பளமாகவே உள்ளது.

ரஜினி கூட ரஞ்சித் போன்ற இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க, விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் கமர்ஷியல் வட்டத்தில் மாட்டிக்கொண்டது வருத்தம் தான்.