fbpx
Connect with us

“திடீர்” என்று “ரஜினி” ரசிகர்களை சந்திக்க காரணம்? இதோ…

Rajini_His Fans

News | செய்திகள்

“திடீர்” என்று “ரஜினி” ரசிகர்களை சந்திக்க காரணம்? இதோ…

ரஜினி, கிட்டத்தட்ட 10 வருசத்துக்கு அப்புறம் எதுக்கு ரசிகர்களை சந்திக்கிறார்? சிவாஜி படத்தின் வெற்றியின்போது ரஜினி ரசிகர்களை சந்தித்தார். அதன் பின் பிறந்தநாளின் போது, வீடு வாசலில் நின்று ஒரு கும்பிடை போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார். இப்போ எதுக்கு சந்திக்கிறார்?

ஒரு நாளைக்கு 2000 பேராக,ஏப்ரல் 12-ம் தேதியிருந்து 6 நாளைக்கு, ரசிகர் மன்றத்திடம் டோக்கன் வாங்கி வருபவர்களை சந்தித்து படம் எடுத்துக்கொள்ளப்போகிறார். அதனால் 12 ஆயிரம் பேர்களுக்கு மேல் ரஜினியை சந்திக்க போகிறார்கள். ரஜினி தன்னுடைய அரசியல் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. சும்மா ஒரு போட்டோ, அவ்வளவு தான்.

இதற்கு காரணம் என்ன? ஏன் இந்த திடீர் கரிசனம்?

எல்லாம் 2.0 படம் தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்து வட்டாரங்கள். நம்ம தலைவர் சும்மா ஒரு விஷயத்தில் இறங்குவாரா? 450 கோடியில் படம் எடுத்து இருக்காங்க, அதுவும் 3டியில். படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ்.

எப்பவும் போல ரசிகர்கள் வந்தால், வசூல் எப்பவும் போல் அதான் இருக்கும். அதை இரண்டு மடங்காக ஆக்க, வேறு வழி. ரசிகர்கள் பலமுறை உணர்ச்சிவசப்பட்டு தலைவா, தலைவா ன்னு பார்த்தால் தான் உண்டு.

அதனால் தான் இந்த சந்திப்பு.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top