News | செய்திகள்
போக்கிரி ராஜா தள்ளிப்போனதற்கு இதுதான் காரணமா ?
ஜீவா, சிபி சத்யராஜ், ஹன்சிகாவை வைத்து ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் படம் “போக்கிரி ராஜா”. “பி.டி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல்” நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார் தயரித்துள்ள “போக்கிரி ராஜா” படம் இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டது. இப்போது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
அதாவது போக்கிரி ராஜா படத்தை ஒரு வாரம் தள்ளி மார்ச் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். இந்த தகவலை போக்கிரி ராஜா படக்குழுவினரரே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த தள்ளி வைப்புக்கு என்ன காரணம்? பிப்ரவரி 26 அன்று கலைப்புலி தாணுவின் கணிதன் படமும், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள ஆறாது சினம் படமும் வெளியாக உள்ளன. இந்தபடங்களுக்கு அதிக தியேட்டர் கிடைத்துள்ளது, போக்கிரி ராஜா படத்திற்கு குறைந்த அளவிலேயே தியேட்டர்கள் கிடைத்திருப்பதால் படம் தள்ளிப்போய் இருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
