Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிக்ஸ் பேக் சீன் டீசரில் ஏன் இல்லை ?
விவேகம் டீசர் நேற்று வெளியாகி சமூகவலைதளங்களில் கலக்கிகொண்டிருக்கிறது. பல பிரபலங்கள் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
ரசிகர்கள் ட்ரோல், ட்ரண்ட் என கலக்கிக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு புறம் வீடியோவுக்கான பார்வைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
இதெல்லாம் இருந்தாலும் first look போஸ்டர் வந்த போது அஜித்தின் சிக்ஸ் பேக் உண்மைதானா என சிலர் கேள்விகளை எழுப்பினர்.
படக்குழுவும் சிக்ஸ் பேக் பற்றிய தகவல்கள் அடுத்த டீசரில் இருக்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் ரசிகர்களும் வீண் கேள்விகள் கிளப்பியவர்களின் வாயை மூடிவிடலாம் என டீசரில் அதை எதிர்பார்த்தனர். ஆனால் அது பற்றி எதுவும் இல்லை.
இதனால் அவர்களுக்கு சிறு வருத்தமே. ஆனாலும் டீசர் மாஸாக வந்திருப்பதாக அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவா அதற்கான விடையை படத்தில் சொல்லிவிடுவார் என்ற நம்பிக்கை உண்டு.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
