Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிஜேபியின் மெர்சல் பிரச்சனை ஏன்? விளாசிய பிரபல நடிகர்
Published on
விஜய் நடித்த மெர்சல் படம் வசூலை வாரி குவித்தது. மேலும் ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளை கையிலெடுத்து மத்திய அரசை பழி வாங்கியது. தமிழர்களுக்கான ஒரு பாடல், மூன்று கெட்டப்பில் நடித்த விஜய். கிளாஸ் சண்டை காட்சிகள் என எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப படமும் ஓடியது.

Mersal-Vijay
பிஜேபி கட்சியின் பிரச்னையால் மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு கூடியது. இது குறித்து நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில், இந்த படத்திற்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை.
அது கிடைக்கனும் என்று தான் பிஜேபி ஆட்கள் பிரச்சனை செய்து தனியாக பார்த்துள்ளார்கள். அதை கம்பெனி ஆட்களை கேட்டால் காட்டியிருப்பார்கள். இந்த Preview காட்சியை பார்க்க தான் அவர்கள் இப்படியெல்லாம் செய்தார்கள் என்று அவர் பாணியில் காமெடியாக பேசியுள்ளார். யாருக்குத் தெரியும்? அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் இதான் காரணமோ என்னவோ..
