பெண்களில் அழகு என்றால் அது கேரளா தான் அங்கு உள்ள பெண்களை பார்த்தல் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்ளோ அழகு. கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வரும் நடிகையை பார்த்தாலே தெரியும் கேரளா பெண்களின் அழகு.

பெண்களின் அழகு குறித்த பார்வைகள் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம்வரை தொடர்ச்சியான ஒரு ஈர்ப்பாகவே இருந்து வருகிறது.ஆசிய நாடுகளில் அழகென்ற வகையில் நாம் அதிகம் வியந்து பார்க்கும் பெண்கள் தான் கேரளத்துப் பெண்கள்.

இவர்களது அழகான கண்கள், நீளமான கூந்தல், வாளிப்பான உடல்வாகு, கொளுகொளு கன்னங்கள் என்பவற்றோடு பளிச்சிடும் முகம் அவர்களின் அழகின் முத்திரைகளாக விளங்குகின்றன.

சரி, இவர்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்?

இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் முக்கியமானது இவர்கள் தமது அழகில் மிகுந்த அக்கறைகொண்ட பராமரிப்பைப் பேணுவதே.

குறிப்பாக இரசாயனம் கலந்த முகப்பூச்சுக்களை மலையாளப் பெண்கள் ஒருபோதுமே உபயோகிக்கமாட்டார்கள். பெரும்பாலும் இயற்கை சார்ந்த அழகூட்டிகளையே பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களது முகம் பருக்களால் ஆளப்படாது பளிச்சென்று இருக்கின்றது.

மேலும் இவர்களது முகத்தின் சருமம் மிகுந்த மென்மையானதாக இருக்கும். இதற்கு காரணம், தினமும் குளிக்கும்போது சவர்க்காரம் உள்ளிட்ட இரசாயன அழுக்கு நீக்கிகளைப் பயன்படுத்தாமல் மஞ்சள் அரைத்து தேகமெங்கும் பூசிக் குளிப்பார்கள்.

எப்பொழுதும் தலைக்கு தேங்காய் எண்ணெயை மட்டுமே தடவுவார்கள். ஷம்பு போட்டு முழுகுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இதனால் அவர்களது கூந்தல் மிகுந்த கருமையானதாகவும் பட்டுப்போன்ற மினுமினுப்பையும் கொடுக்கின்றது.

அதோடு கூந்தல் நீளத்திற்குக் காரணம் அவர்கள் ஷம்புவுக்கு பதிலாக செம்பருத்தி இலையை இடித்து தலைக்குத் தடவி முழுகுவதே என்று சொல்லப்படுகிறது.

அவர்களின் கொளுகொளு கன்னங்களுக்கு காரணம், தினமும் தூங்குவதற்கு முன்னர் சிவப்பு நிறச் சந்தனக் கட்டையை நீரில் தேய்த்து முகத்தில் பூசிவிட்டு மறு நாள் காலையில் முகம் கழுவுவார்கள்.

அழகுக் குறிப்பில் இவை எல்லாம் சொல்லப்பட்ட விடயங்களாக இருந்தாலும் கேரளப் பெண்களைப் போல ஏனைய பெண்கள் இவற்றைக் கடைப்பிடிப்பது குறைவாகும்.

ஆனால் கேரளத்துப் பெண்கள் இவற்றை தமது நித்திய கருமமாக தவறாமல் செய்துவருவதாலேயே மிகுந்த அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதைக் காணலாம்!

சமீப காலங்களில் கேரளப் பெண்களை மணப்பதற்கு ஹரியானா ஆண்கள் தேடி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளா போன்ற கல்வியறிவு பெற்ற மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் ஏன் அதைவிட பின்தங்கிய ஹரியானா ஆண்களை…