மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி தான் இரண்டு வாரமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் முகம். அவர் ஒரு தொலைக்காட்சி நடத்திவரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

தொடக்கம் முதலே ஜூலியோடு பலரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சில நாட்கள் முன்பு காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி இடையே சிறிய உரசல் இருந்தது. அது தற்போது பெரிய சண்டையாக வெடித்துள்ளது.

உங்களை போல TRPக்காக என்னால் நடிக்க முடியாது என ஜூலி சொல்ல, அது காயத்ரி ரகுராமுக்கு அதிக கோபத்தை வரவழைத்துவிட்டது. பின்னர் ஒரு பெரிய வாய் சண்டைவந்துவிட்டது.

பின்னர் மனமுடைந்த ஜூலி வெளியில் வந்து கேமராவை பார்த்து “நான் இப்பவே வீட்டுக்கு போயாகனும், எதாவது பண்ணுங்க.. நான் போய் பெட்டியை ரெடி பண்றேன்” என கண்ணீருடன் கூறிவிட்டு சென்றார்.

அதனால், ஜூலி வெளியேறிவிடுவாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது