அஜித்தின் விவேகம் பட டீஸருக்கு கவுண்டவுன் (CountDown) எல்லாம் வைத்து புதுவிதமாக ரிலீஸ் செய்தனர் படக்குழு. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்த டீஸர் அதிக லட்சம் பார்வையாளர்களையும் லைக்ஸையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை மதுரை ஏரியாவில் (MRT) முருகானந்தம் என்பவர் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளார். MRT என்றால் மதுரை, ராம்நாத், தேனியும் அடங்கும்.

அதிகம் படித்தவை:  மார்ச் 4-ல் வெளியாகும் ஹன்சிகாவின் இரண்டு படங்கள்!

இந்நிலையில் தேனி திரையரங்க உரிமையாளர் ஒருவர் படம் குறித்து பேசும்போது, ஒரு படத்துக்கு நாங்கள் அதிகம் செலவு செய்வது இதுவே முதன்முறை. ஏனெனில் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகம். இந்த படம் கண்டிப்பாக லாபத்தில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் படம் லாபத்தை கொடுக்கும் என்றார்.