டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் டோனிக்கு ஏன் முதன்மை வீரர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது என நிர்வாக குழு உறுப்பினர் ராமச்சந்திர குஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அமல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தற்போது இந்த நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வாரிய பணிகளை கவனித்து வருகிறது. இந்த நிலையில், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான ராமசந்திர குஹா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய்க்கு எழுதி இருக்கும் கடிதத்தில் பல்வேறு அதிருப்திகளை ராமச்சந்திர குஹா வெளிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிகம் படித்தவை:  பிரசவம் ஆவதற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

அவரது ராஜினாமா கடித்தில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் டோனிக்கு ஊதிய ஒப்பந்தத்தில் ‘ஏ’ கிரேடு வழங்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இந்திய சினிமாவில் நடிகருக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள்.!

மட்டுமின்றி கவாஸ்கருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் காரணம் என்ன என்பதையும் அவர் வினவியுள்ளார்.

மேலும், இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். தொடர்பாக பணியாற்றுபவர்களுக்கு உள்ள இரட்டை ஆதாய பிரச்னை உரிய முறையில் கையாளப்படவில்லை எனவும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனவும் ராமச்சந்திர குஹா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

குஹாவின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.