புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தனுஷுக்கு எதிர்ப்பு, நயனுக்கு ஆதரவு, காரணம் இதுதான்.. பார்வதி நாயர் ஓப்பன் டாக்

Nayanthara: தனுஷ் நயன்தாரா பஞ்சாயத்து இன்னும் முடிந்த பாடு இல்லை. மக்கள் கொஞ்சம் மறந்திருக்கும் பொழுது தான் இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் இருவரும் கலந்து கொண்டு மீண்டும் அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள்.

போதாத குறைக்கு ஆகாசின் திருமண வரவேற்பில் தனுஷ் மற்றும் சிம்பு கலந்து கொண்டு நேற்று மீண்டும் சமூக வலைத்தளத்தை பற்ற வைத்தார்கள். பஞ்சாயத்து ஒரு புறம் இருக்க நயன்தாராவுக்கு ஒரு சில நடிகைகள் ஆதரவு கொடுத்தது தான் பெரிய அளவில் பேசும் பொருளானது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்னவென்று பார்க்காமல் சட்டென லைக் போட்டுவிட்டு மீண்டும் அதை நீக்கிவிட்டார். ஆனால் நடிகைகள் பார்வதி நாயர், ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் அப்படி செய்யவில்லை. இத்தனைக்கும் இரண்டு பேருமே தனுசுடன் இணைந்து பணிபுரிந்த நடிகைகள்.

பார்வதி நாயர் ஓப்பன் டாக்

அப்படி இருக்கும்போது எதனால் நயன்தாராவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இவங்களும் அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா, ஒருவேளை தனுஷ் மீது மீடு புகார் வருமா என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில் நயன்தாராவுக்கு இந்த விஷயத்தில் எதற்கு ஆதரவு கொடுத்தேன் என பார்வதி நாயர் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நயன்தாரா ரொம்பவும் கஷ்டப்பட்டு இப்படி ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார், அதனால் அவர் சொல்வதில் எந்த தவறான விஷயமும் இருக்காது.

மேலும் நான் நிறைய விஷயங்களில் இந்த மாதிரி பாதிக்கப்பட்ட போது எனக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை. அதனால்தான் நான் நயன்தாராவை ஆதரிக்கிறேன். நயன்தாரா குரல் கொடுக்கவும் நான் தயார் என சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

Trending News