நயன்தாரா இப்போதெல்லாம் ஹீரோயினுக்கு ரொம்ப இம்பார்டென்ஸ் உள்ள படங்களில் தான் நடிக்கிறார். அதனால் அவரை சந்தித்து கதை சொல்லி கால்சீட் கேட்டவர்கள் ஒரு பெரிய க்ரூப்.

அந்த இயக்குனர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நயன்தாராவுக்காக காத்திருக்கிறார்களாம். எப்போது போய் கேட்டாலும், கொஞ்சம் பொறுங்க என்றே பதில் வருகிறதாம்.

ஒரு வருஷத்தில் எத்தனை படங்கள்தான் நயன் பண்ணமுடியும்? மேக்சிமம் 3 படங்கள் டைட்டா கால்சீட் தந்தா பண்ணலாம். ஆனால், வெய்ட் பண்ணும் இயக்குனர்கள் 10க்கும் மேலயாம்.

ஏன் அம்மணி அப்படி பண்ணுகிறார்?என்றால், நல்ல கதைகள் த்ரிஷா, காஜல் என்று ஹீரோயின் ஓரியண்டட் படம் பண்ண தயாராக இருக்கும் நடிகைகளுக்கு போய் விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இப்படி செய்துள்ளாராம்.