நடிகர் ராதா ரவி எப்போதுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சுற்றி நடக்கும் விசயங்களை பேசி கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.

அட்லீ தயாரிப்பில் ஐக் எடுத்திருக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி, என் அப்பா ரசிகர்கள் போடும் பிச்சை காசில் தான் நடிகன் வாழ்கிறான் என்று சொல்வார்.

அறிஞர் அண்ணாவில் தொடங்கி கே.பி. சுந்தராம்பாள் போன்ற கலைத்துறையில் இருப்பவர்கள் பல காலமாக அரசியல் இருந்து வருகிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். இதனால் தவறில்லை.

என்னிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பலர் கட்சி ஆரம்பிப்பதை பற்றி கேட்டார். அதற்கு நான் ரஜினி சாரை சொல்லவில்லை. என் அப்பா ரத்த கண்ணீர் படத்தில் ஆளாளுக்கு ஒரு கட்சி.

அவனவனுக்கு ஒரு தலைவன். 10000 பட்டினி பட்டாளம். Beggers ஏன் டா நாட்ட கெடுக்குறீங்க என சொல்லியிருப்பார். அது தான் நினைவிற்கு வருகிறது என அவர் பேசினார்.

சமீபத்தில் ரஜினி அரசியல் பற்றிய தன் கருத்துக்களை எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.