Connect with us

Cinemapettai

விராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன்? பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

India | இந்தியா

விராட் கோலிக்குப் பதில் சொன்ன நீங்க தூத்துக்குடி பற்றி வாய்திறக்காதது ஏன்? பிரதமரைக் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் மக்களும் இணைய காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதன்பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த போலீஸார் மாலையில் அவர்களை விடுவித்தனர். அதேபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையையும் அரசு துண்டித்திருக்கிறது. தமிழகத்தில் இணைய சேவை துண்டிக்கப்படுவது அநேகமாக இது முதல்முறை என்கிறார்கள். இந்த சம்பத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தேசிய அளவிலான ஊடகங்களிலும் இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. பிரதமர் மௌனம் காப்பதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதை ஒரு சவலாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விடுத்தார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, அந்த சவாலை, நடிகையும் தனது மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிட உள்ளதாக கோலிக்குப் பதில் அளித்துள்ளார். இது நெட்டிசன்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. விராட் கோலிக்குப் பதில் சொல்ல நேரமிருக்கும் உங்களுக்கு, நாட்டு மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க நேரமில்லையா என்று பலரும் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top