Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏன் தனுஷ் படங்களுக்கு இசையப்பதில்லை….? – அனிருத்
தனுஷ்-அனிருத் கூட்டணி என்றாலே ஹிட் பாடல்களுக்கு குறைவே இருக்காது. அந்த வகையில் தனுஷ், அனிருத் கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் செம ஹிட்.
ஆனால், சமீபகாலமாக இவர்கள் இருவரும் ஒன்றாக இனைந்து வேலை செய்வது இல்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து அனிருத் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பியவர் தனுஷ். ஒருவருடனேயே அடுத்தடுத்து பணியாற்றினால் அதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதனால் சிறு இடைவெளிக்கு பிறகு கூடிய விரைவில் நாங்கள் இருவரும் இணைத்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
