அஜித்தின் விவேகம் படத்தினை இயக்கிக்கொண்டிருக்கிறார் சிறுத்தை பட இயக்குனர் சிவா. இது அஜித்துடன் அவரின் மூன்றாவது படம். முதன்முதலில் அஜித்துடன் வீரம் படத்தில் இணைந்தார்.

அதன் பின், அஜித்தின் அடுத்த படமான வேதாளம் படத்தின் வாய்ப்பையும் சிவாவுக்கே வழங்கினார் அஜித். அதன்பின் தன் மூன்றாவது படமான விவேகத்தையும் சிவாவுக்கே வழங்கினார்.

இப்போது அந்த பட ஷூட்டிங்கில் உள்ளார் சிவா. அவர் இருப்பது என்னமோ பல்கெரியாவில்.ஆனால், அவர் ரஜினியை சந்தித்து கதை சொல்லப்போகிறார் என்றும், கதை சொல்லிவிட்டார் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. இது எதுவுமே உண்மை இல்லையாம்.

ஒரு இயக்குனர் சிவாவை அஜித்திடமிருந்து பிரிக்க பரப்பிவிட்ட செய்திதான் இதுவாம்.

சிவா பாட்டுக்கு மூன்று நான்கு வருசமாக அஜித்தை யாரும் அணுகமுடியாதபடி நல்ல ரேப்போவில் வைத்துக்கொண்டு, அடுத்தடுத்து அவரின் படத்தை மட்டுமே இயங்கிக்கொண்டு இருப்பதினால், எந்த இயக்குனரும் அஜித்தை அணுக முடியவில்லை.

அடுத்த படத்தையும் அவரே தான் இயக்குவார் என்ற செய்திக்கு பின், அஜித்துக்கும் சிவாவுக்கும் விரிசலை ஏற்படுத்த இப்படி ஒரு திட்டமாம். அதற்காக தான் ரஜினிக்கு கதை சொன்னார், சிவகார்த்திகேயன் கால்சீட் வாங்கினார் என்றெல்லாம் செய்தி பரப்பிவிடப்பட்டதாம்.

அஜித் கிட்ட ஒரு பழக்கம். அப்படியே உருகிபோய் கூடவே வச்சிருப்பார். அவர்கிட்ட காண்டாக்ட் விட்டு போய்விட்டதுன்னா, நீங்க அவரை எங்கியாவது சந்தித்தால் தான் உண்டு. பேசக்கூட முடியாது. கையை குலுக்கி கும்பிடை போட்டுட்டு போய்விடுவார்.

இது தெரிந்துதான் சிவா அவரை விட்டு எங்கேயும் நகர்வது கிடையாது. அதிலும் ஒரு வேட்டு வைக்கிறார்கள். நடக்கட்டும்.