கோலிவுட் ஸ்டார்களில் ரஜினி, கமல், விஜய், சூர்யா என்று எல்லோருக்குமே தமிழ் தவிர தெலுங்கு, மலையாளத்தில் ஒரு மார்க்கெட் உண்டு.

ஆனால், அஜித்துக்கு தமிழ் தவிர வேற மார்க்கெட் எதுவும் இல்லை. இப்போது தான் கன்னடத்தில் “என்னை அறிந்தால்” படத்தை டப்பிங் செய்து போடலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை.

பல மொழிகளில் படம் வெளியிடப்பட்டால் ஈசியாக 100 கோடி செலவு செய்தால் கூட வசூல் செய்துவிடலாம். ஆனால் தல சம்பளம் மட்டுமே 40 கோடியாம். இதில் டாக்ஸ் வேறு ப்ரொடியூசர் கட்டிடணும். இது போக ப்ரொடக்சன் செலவு வேறு…

Ajith-Bulgaria-Vivegamவிவேகம் படத்தை பொறுத்தவரை, அஜித் சம்பளத்தோடு சேர்த்து கிட்டத்தட்ட இதுவரைக்கும் 80 கோடி தாண்டுவதாக கோலிவுட்டில் தகவல் பரவிவிட்டது.

இன்னும் போஸ்ட் ப்ரொடக்ஷன், ப்ரோமோஷன் என்று செலவுகள் இருக்கின்றன. தமிழகத்தில் ஓப்பனிங் வாரம் மட்டும் 50-60 கோடியை கிராஸ் செய்துவிட்டால், தயாரிப்பாளர் தப்பிப்பாராம்.

படு டென்ஷனாய் பல்கெரியாவிலேயே உட்கார்ந்து இருக்கும் விவேகம் ப்ரொடியூசர் படம் ரிலீஸ் ஆகி முதல் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டது போல் தான் நிலையில் இருக்கிறாராம்.