விஜய் டிவியில் அழகர் ராம்குமார் இயக்கத்தில் சக்கைபோடு போட்டுவரும் சீரியல் சரவணன் மீனாட்சி.

saravanan Meenakshi

விஜய் டீவியில் பல ஆண்டுகளாக ஓடி வரும் சீரியல் சரவணன் மீனாட்சி. முதலில் ஆர்.ஜே மிர்ச்சி சரவணன், முதல் தலைமுறை சரவணன்-மீனாட்சியில் சரவணனாக நடித்தார்.

அவருக்கு ஜோடியாக ஶ்ரீஜா நடித்தார். காதல் காட்சிகளில் நெருக்கம் காண்பித்த அவர்கள், உண்மையிலேயே காதல் வசப்பட்டனர்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

கதையின் திடீர் திருப்பமாக வில்லன் கதாப்பாத்திரம், ஹீரோயினை திருமணம் செய்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை என்றால் பாருங்களேன்.

saravanan

ஒரு வழியாக சீரியலின் முதல் தலைமுறை முடிய, உடனடியாக அவர்களது குழந்தைகளை வைத்து இரண்டாவது தலைமுறை சரவணன் மீட்னாட்சியை ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கிறது. மீனாட்சியாக ரக்சிதா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டாம் தலைமுறை, சரவணன் மீனாட்சியாக, இர்பான் மற்றும் ரக்ஷிதா ஆகியோர் நடிப்பை தொடங்கினர். ஆனால் இர்பான் திரைப்பட ஹீரோவாகிவிட்டதால் மனிதர் வெள்ளித்திரை சூட்டிங்குகளில் படுபிசி. எனவே சீரியலின் முக்கிய கட்டத்தில்,

தற்போது அவருக்கு சரவணனாக ரியோ ராஜ் நடித்து வருகிறார். இவருக்கு முன் கவின் மற்றும் இர்ஃபான் முகமது ஆகியோர் மீனாட்சிக்கு சரவணனாக நடித்தனர்.

saravanan

ஆனால், ரியோ ராஜுக்கு முன்னர் அவருக்கு பதிலாக தேர்வானவர் சஞ்சீவ் தான். அவர் தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார்.

ரக்சிதாவிற்கு ஜோடியாக சஞ்சீவை பார்க்கும் போது அவர் சற்று குட்டையாக தெரிந்துள்ளார், அதன் காரணமாக அவருக்கு பதில் ரியோவை தேர்வு செய்துள்ளனர்.