தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படமானது திரையரங்கில் தாறுமாறான வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ள செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.
மேலும் தளபதி 65 படத்தின் நாயகி பற்றி பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் ரஷ்மிக்கா மந்தான்னா என்கின்றனர் மறுபுறம் பூஜா அகர்வால், நிதி அகர்வால் என சொல்லப்படுகிறது.
ஆனால் வில்லன் யார் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அவர் யார் என்றால், நடிகர் அருண் விஜய் தான், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவைக்க படக்குழு, அருண் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
அது மட்டுமில்லாமல் நெல்சன் திலீப்குமார்-அனிருத் கூட்டணி மீண்டும் தளபதி 65 படத்தில் இணையவிருப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதேபோல் அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடித்து தூள் கிளம்பியது போல, தளபதி விஜய்க்கு வில்லனாக கச்சிதமாக பொருந்தும் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.