யார் சொன்னது அப்படி ..? அந்தர் பல்டி அடித்த சென்சார் போர்டு,,!! விழி பிதுங்கி நிற்கும் மெர்சல் படக்குழு..!! - Cinemapettai
Connect with us

Cinemapettai

யார் சொன்னது அப்படி ..? அந்தர் பல்டி அடித்த சென்சார் போர்டு,,!! விழி பிதுங்கி நிற்கும் மெர்சல் படக்குழு..!!

News | செய்திகள்

யார் சொன்னது அப்படி ..? அந்தர் பல்டி அடித்த சென்சார் போர்டு,,!! விழி பிதுங்கி நிற்கும் மெர்சல் படக்குழு..!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தீபாவளி ரிலீஸாக ‘மெர்சல்’ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு பிரச்னைகள் ‘மெர்சல்’ படத்தை வெளியிடவிடாமல் தொடர்ந்து துரத்தி வருகிறது.

‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக கடந்த 6ஆம் தேதி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இயக்குநர் அட்லீ.

vijay mersal

யு/ஏ சான்றிதழ் பெற்றால், குழந்தைகள் தனியாக படத்தைப் பார்க்க முடியாது. பெற்றோர் அல்லது அவர்களின் அனுமதியுடன் மட்டுமே பார்க்க முடியும்.

அத்துடன், யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்தை அப்படியே நேரடியாக டிவியிலும் ஒளிபரப்ப முடியாது. சில காட்சிகளை நீக்கி யு சான்றிதழ் பெற்ற பிறகே டிவியில் ஒளிபரப்ப முடியும்.

mersal

‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி கிராஃபிக்ஸில் செய்யப்பட்டதுதான் என்பதற்கான ஆதாரத்தைப் படக்குழுவினர் சமர்ப்பிக்கவில்லையாம்.

அத்துடன், ராஜாநாகத்தைப் பயன்படுத்திவிட்டு, அதன் பெயரை நாகப்பாம்பு என்று சான்றிதழில் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். இதனால், விலங்குகள் நல வாரியம் அனுமதி தராமல் இருக்கிறது.

இந்த நிலையில், யார் அப்படி சொன்னது..? படத்திற்கு விலங்கு நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தணிக்கை சான்று வழங்கவில்லை என தணிக்கை குழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மெர்சல் படம் இன்னும் தணிக்கை சான்றே வாங்கமால் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Thalapathy Vijay with Gogo Requiem

இந்நிலையில், ‘எங்களிடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைக்காமல் நீங்கள் எப்படி சென்சார் சான்றிதழ் வழங்கலாம்’ என சென்சார் போர்டு அதிகாரிகளிடம் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதில் அளித்துள்ள சென்சார் போர்டு அதிகாரிகள், ‘வாய்மொழியாக மட்டுமே நாங்கள் யு/ஏ என்று சொல்லியிருக்கிறோம். இதுவரை அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் வழங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலேயே ‘மெர்சல்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள விவரம் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top