புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

உளவுத்துறையை இறக்கி TVK விஜய்-யை வேவு பார்க்கும் அரசு.. மாநாடு காட்டிய பயம் இன்னும் போகல!

விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். இவரும் மற்ற நடிகர்கள் கட்சி மாதிரி கட்சி ஆரம்பித்து அதன்பின் லெட்டர் பேட் கட்சியாக கொண்டு போவார் என மற்ற கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அடுத்தடுத்து அதிரடி காட்டினார் விஜய். தான் மற்ற நடிகர்கள் தொடங்கிய அரசியல் கட்சி மாதிரி அல்ல என வித்தியாசம் காட்டி, கொடிப்பாடலையும், கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்து, கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வி.சாலையில் பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்டி, தமிழக திராவிட கட்சிகளை பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.

தன் கொள்கையை விளக்கவும், கட்சியின் பலத்தை நிரூபிக்கவும் இந்த பிரமாண்ட மாநாட்டை எப்படி தொண்டர்களுக்கு காசும், சாப்பாடும் கொடுக்காமல் நடத்திக் காட்டினார் விஜய் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல, விரைவில் தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளும் விஜய், 3 லட்சம் நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமித்து, 28 சார்பு நிர்வாகிகளையும் நியமித்து, மாவட்ட செயாளர்களுக்கு பொறுப்புகள் என்னென்ன என்பதை கூறவுள்ளார்.

ஏற்கனவே ஆளுங்கட்சி தவெகவின் தொண்டர்களை நோட்டமிட்டு வருவதால் வாக்காளர் அட்டையில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளும்படி உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே தவெகவுக்கு 50க்கும் அதிகமான தொண்டர்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர் கூறிய நிலையில், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாலும் மாநாட்டுக்குப் பின் விஜய் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருப்பாதாலும் தொண்டர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என தெரிகிறது.

விஜய் மாநாட்டுக்கு கூட்டத்தை அழைத்துச் சென்றது யார்? விவரம் சேகரிக்கும் உளவுத்துறை

இந்த நிலையில் விஜய்-யின் தவெக முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில், தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து கூட்டத்தை அழைத்துச் சென்றவர்களின் விவரத்தை உளவுத்துறை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.

இதற்காக உத்தரவை ஆளுங்கட்சி முக்கிய தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, மாநாட்டில் திரண்ட கூட்டம், ரசிகர்கள் கூட்டமா? வாக்காளர்களா? என்பதை இதன் மூலம் ஆய்வு செய்யப்படுவர் எனவும், மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகள், தலைவர்கள், நிர்வாகிகள் பட்டியலை போலீஸார் விசாரித்து வருவதாகவும். அவர்களின் வயது, முகவரி, மற்ற கட்சியில் உறுப்பினர்களா? சொந்த ஊர், வேலை செய்யும் இடம் ஆகிவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றதாக கூறப்படுகிறது.

விஜய்-யின் பலம் எப்படி?

இதன் மூலம் தவெகவின் பலத்தை தெரிந்துகொள்ள இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும், உளவுத்துறை சேகரிக்கும் பட்டியலை வைத்து, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை ஒப்பிட்டு பார்த்து விவரங்களை சேகரிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும், முக்கியமாக சென்னையில் விஜய்யின் பலம் எப்படி என்பதை கணிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்பது விஜயின் கனவாக இருக்கும் நிலையில், தவெக மா நாட்டுக்கு போட்டியாக திமுகவும் தங்கள் பலத்தை காட்ட விரைவில், பல லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி இதேபோல் பிரமாண்ட மாநாட்டை நடத்தலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News