ஒரு படம் வலைதளங்களில் லீக் ஆகவிடாமல் வெளியாவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதேபோல் அண்மையில் கபாலி பாடல்கள் இணையதளங்களில் லீக் ஆகியிருந்தது.

இது எப்படி வெளியானது என்று விசாரிக்கையில், பெரும்தொகை கொடுத்து பாடல் மற்றும் வசனங்களை வாங்கிய நிறுவனம் தங்களது லாபத்திற்காக பாடல் வெளியீட்டிற்கு முன்பே பாடல் மற்றும் வசனம் இரண்டையும் வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ஒருநாள் முன்பாகவே பாடல்களை வெளியிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.