தோனியை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தாலும் தோனியின் ரசிகர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை என்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் அதிகமாக கவணிக்கப்படும் கிரிக்கெட் வீரர்கள் முதல் நபராக இருக்கும் தோனி கண் அசைத்தாலும் அது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இரு தினங்களுக்கு முன்பு கூட தோனி தரையில் அமர்ந்து கார் ஓட்டி விளையாடி அது உலகம் முழுவதும் வைரலானது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

 

அதிகம் படித்தவை:  விஜய்யின் மெர்சல் படத்தின் மூன்றாவது போஸ்டர் இதுதானா? வைரலாகும் டைட்டில் போட்டோ உள்ளே

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தோனி விளையாடவிட்டாலும் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேரால் ஃபாலோ அதாவது பின் தொடரப்படும் தோனி, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பக்சன் என்று ஒருவரை  மட்டும் தான் பின் தொடர்கிறார், தோனி பின்பற்றுவர்கள் பட்டியலில் வேறு ஒருவரும் இல்லை, இதுவே அமிதாப் பக்சனுக்கு ஒரு கவுரவம்.

அதிகம் படித்தவை:  சாமி 2... ஹாரிசை தூக்கிய ஹரி... மீண்டும் வந்தார் டிஎஸ்பி!

சமூக வலைதளங்களில் அவ்வளவாக காணப்படாத தோனியை விட எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும்  அமிதாப் பக்சனுக்கு குறைந்த அளவிலான ஃபாலோயர்ஸே உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.