சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரில் இன்று (ஜூன் 4) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் களம் காணும் இந்தப் போட்டி, உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி வெளியிட்ட வரலக்ஷ்மி சரத்குமாரின் 'வெல்வட் நகரம்' பர்ஸ்ட லுக் போஸ்டர் !

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணியை பாகிஸ்தான் அணி தோற்கடிக்கவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு சாதகமான புள்ளிவிவரமே உள்ளது.

அதிகம் படித்தவை:  இந்த வருடத்தில் மதன் கார்க்கி எழுதியுள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதில் சூப்பர் ஹிட் இவை தான் !

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகள் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. அவற்றில் இரண்டு முறை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஒரே ஒரு முறை மட்டும் இந்திய அணி வென்றிருக்கிறது. அந்த போட்டியிலும் டக்வொர்த் லீவிஸ் முறையில்தான் ஜெயித்திருக்கிறது.