Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் 4 வீட்டிலிருந்து வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் இவர்தான்! கும்பிடு போட்ட ரசிகர்கள்
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4 ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கன்டஸ்டன்ட்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் அடிப்படையில் 8 பேர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த எட்டு பேரில் ஒருவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பதால் சமூக வலைத்தளத்தில் தற்போது ஏகப்பட்ட கணிப்புகள் எழுந்துள்ளன.
அதாவது பிக் பாஸ் நடத்திய கடந்த கால சம்பவங்களை பகிர்ந்து கொள்ளும் போட்டியில் எட்டு பேர் சொன்ன கதைகள் சிறப்பாக இல்லை என்று மற்ற போட்டியாளர்கள் முடிவு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இதை அடுத்து இவர்களில் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டினுள் தொடர்வார்கள் என்ற அலசலை மேற்கொண்டுள்ளனர் இணையவாசிகள்.
அந்த வகையில் லிஸ்டில் தேர்வு செய்யப்பட்டவர்கள்:
- சனம் ஷெட்டி: சனம் ஷெட்டிக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் அவர் வெளியே போக குறைந்த வாய்ப்பு தான் இருக்கிறது.
- சுரேஷ் சக்ரவர்த்தி: நம்ப மொட்ட அங்கிள் தான் முதல் நாளில் இருந்தே பிக் பாஸுக்கு கண்டெண்ட்ட அள்ளி அள்ளிக் கொடுத்துருக்காரு. இவர் பிக் பாஸ் விட்டு வெளியே போகக் சான்ஸ் கம்மி தான்.
- ரம்யா பாண்டியன்: குக் வித் கோமாளியில் பங்கு பெற்று தமிழகத்தில் பல தரப்பினரின் ஆதரவைப் பெற்றவர் தான் ரம்யா பாண்டியன். இவர் வெளியேறினால் பிக்பாஸ் அவ்வளவுதான் என்பதை அறிந்த சேனல் இவரை வெளியேற்ற கண்டிப்பாக வாய்ப்பில்லை.
- சம்யுக்தா: ‘சீனியர் மாடல் என்று நான் சொல்லிக் கொள்ள மாட்டேன்’ என கட் அண்ட் ரைட்டாக பேசி மீரா மிதுனை வீட்டிலிருந்தே சீண்டியவர் சம்யுக்தா. ஊமை குசும்பு அதிகம் செய்வதால் இவர் அடுத்த வாரம் வீட்டை விட்டு செல்ல மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது.
- ரேகா: 4 நாளா சாப்டா இருந்த ரேகா திடீரென எவிக்சனுக்கு பிறகு செம டெரரா மாறிட்டாங்க.
- கேப்ரில்லா: இவர் சொன்ன குட்டி ஸ்டோரி மொக்க ஸ்டோரியா இருந்தாலும் இவருக்கு இன்ஸ்டாகிராம்ல நிறைய ரசிகர்கள் இருப்பதால் அவர் வெளியேறுவாரா, மாட்டாரா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
- ஆஜித்: அப்பப்போ பாடுவதற்கு மட்டும் தலையை காட்ர ஆஜித் சூப்பர் சிங்கர்லே இருந்திருக்கலாம். சூப்பர் சிங்கர்ல இவருக்கு ஓட்டு போட்டவங்க இப்பவும் இவருக்கு ஓட்டு போட்டா வேணா ஆஜித் வீட்டில் இருக்க சான்ஸ் இருக்கு.
- ஷிவானி: ஷிவானி கடந்தகால கதைய சொல்றேன் என்ற பேர்ல ஏதோ நாலு வரிய உளறிட்டு போனாங்க. இருந்தாலும் ஷிவானிக்கு வெளிய 2 மில்லியன் ரசிகர் கூட்டம் இருக்கதால அவங்க கண்டிப்பா பிக் பாஸ் விட்டு வெளியே போக சான்ஸ் இல்ல.
இந்நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்களா? இல்லை, சம்யுக்தா, ரேகா இவர்களில் யாராவது வெளியேறுவார்களா? என்பதை வெயிட் பண்ணி பாக்கலாம்.
அனேகமாக முன்னாள் நடிகை ரேகா தான் இந்த முறை வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது பிக்பாஸ் வட்டாரம்.
