புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யாரடி நீ மோகினி பார்ட் 2-காக காத்திருக்கும் இயக்குனர்.. தனுஷ், நயன்தாரா சம்மதிப்பாங்களா.?

Dhanush : மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் செல்வராகவன் கதையில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம் தான் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் ரகுவரனின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இது அவரது கடைசி படம்.

இந்நிலையில் இயக்குனர் ஒருவர் யாரடி நீ மோகினி பார்ட் 2 க்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். அதாவது மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார். இவர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நண்பர் ஆவார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய மேயாத மான் படத்தின் கதையை கூறியிருந்தார்.

அதாவது ஒரு நாள் தொலைக்காட்சியில் மேயாத மான் மற்றும் யாரடி நீ மோகினி படத்தை பார்த்தேன். இந்த இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான். அதாவது மகனுக்காக ரகுவரன் நயன்தாராவிடம் பேசும்போது தவறுதலாக அவரது கை தந்தை மீது பட்டுவிடும்.

யாரடி நீ மோகினி பார்ட் 2 வருமா?

இதனால் காதலே வேண்டாம் என்று தனுஷ் உதறி தள்ளிவிட்டு சென்றுவிடுவார். அதேபோல் தான் நண்பனை அழைத்து சென்ற போது காதலி தவறுதலாக பேசும்போது மேயாத மான் படத்தில் வைபவ் காதல் வேண்டாம் என்று முடிவெடுப்பார். யாரடி நீ மோகினி படத்தின் தாக்கத்தால் தான் அந்த காட்சி நான் வைத்துள்ளேன்.

எனக்கு அப்போது அது தெரியவில்லை. மேலும் மேயாத மான் பார்ட் 2 படம் வருமா என்று ரத்ன குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. யாரடி நீ மோகினி 2 படம் வந்தால் அதே சாயலில் கண்டிப்பாக மேயாத மான் 2 படமும் வர வாய்ப்பிருப்பதாக ரத்னகுமார் கூறியிருக்கிறார்.

இப்போது தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மிகப்பெரிய பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இயக்குனர் மித்ரன் ஜவஹர் யாரடி நீ மோகினி இரண்டு எடுக்க ஆசைப்பட்டாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லை.

- Advertisement -

Trending News