அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா என்னும் மாணவி. இவர் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஞாயம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் இந்தியா முழுதும் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.சிறுவயதிலேயே தாயை இழந்த அனிதா மூட்டை தூக்கும் தொழிலாளியான தனது தந்தையின் வளர்ப்பில் வளர்ந்தவள். நன்றாக படிக்க கூடிய அனிதா பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களும்,  பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடைய அனிதா நீட் தேர்வெழுதி முடிவிற்காக காத்திருந்திருக்கிறார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. ஆனால் நீட் தேர்வில் இவரது கட்-ஆஃப் 700-க்கு 86 மட்டுமே.

இதனால் அனிதா ”நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்” என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் மருத்துவ கவுன்சலிங் நீட் முறைப்படியே நடந்தது.

இதனால் மனமுடைந்த அனிதா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் காட்டுதீ போல் பரவி வருகிறது. நாடுதோறும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒரு உயிர் போனாதான் உங்களுக்கெல்லாம் புரியுமா?